பைக் விபத்தில் வாலிபர் பலி

தோகைமலை, பிப். 16: தோகைமலை அருகே உள்ள நாகனூர் ஊராட்சி நாகனூரை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் சிவபாரதி (35). தோகைமலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஜாமியாளம் மகன் ஜபருல்லா (27). இருவரும் தோகைமலை அருகே உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்து சிவபாரதி பைக்கில் ஜபருல்லா பின்னால் அமர்ந்து வந்ததாக தெரிகிறது. பாதிரிபட்டி பிரிவு ரோடு அருகே வந்த போது இருவரும் சாலையில் பலத்த காயத்துடன் ரத்த வௌ்ளத்தில் கீழே கிடந்து உள்ளனர். சாலையில் சென்றவர்கள் தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து இருவரையும் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஜபருல்லா நேற்று இறந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவபாரதி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>