×

கள்ளபள்ளியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர் கோரிக்கை

குளித்தலை. பிப்.16: கள்ளபள்ளி கிராமத்தில் சிம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்போர் புதிய வாடகை கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என குளித்தலை கடம்பர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் கருப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கள்ள பள்ளி கிராம மக்கள் குளித்தலை கடம்பர் கோவில் அலுவலக இந்து சமய அறநிலைத்துறை செயல்அலுவலருக்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது செயல்அலுவலர் அலுவலகத்தில் இல்லாததால் அலுவலக ஊழியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் கருப்பத்தூர் ஊராட்சி கள்ள பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக சிம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். இவ்விடத்திற்கு புதிய கூடுதல் வாடகை கட்டணம் பற்றிய கடிதம் இந்து அறநிலையத்துறை செயல் அலுவலரால் வந்தது.  இது மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில் நாங்கள் பரம்பரையாக முன்னோர்கள் காலத்திலிருந்து இந்த இடத்தில் வசித்து வருகிறோம் .நாங்கள் அனைவரும் கூலி விவசாய வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம்.சமீபகாலமாக எங்களுக்கு சரியான முறையில் விவசாய வேலையும் கிடைக்கவில்லை. ஆகவே எங்களுக்கு கோயில் இடத்தில் குடியிருப்புக்காக போடப்பட்ட பழைய வாடகையை செலுத்துவதற்கு பரிந்துரை செய்து புதிய வாடகை கட்டணத்தை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Residents ,land ,temple ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...