மக்கள் குறைதீர் கூட்டத்தில் 258 மனுக்கள் பெறப்பட்டது

பெரம்பலூர்,பிப்.16: பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 258 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட் டரங்கில், மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொ கை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 258 மனுக்களை கலெக்டரிடம் நேரிடையாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வெங்கட பிரியா சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண் டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சக்திவேல், கலால் உதவி ஆணையர் ஷோபா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>