×

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கல்

பெரம்பலூர்,பிப்.16: பெரம்பலூரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கலெக்டர் வெங்கட பிரியா விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னம் சட் டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  வெங்கட பிரியா தலைமை வகித்து, இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆ ணையர் அலுவலகத்தில் 3,634 ஆண்கள், 7,114 பெண்கள் என மொத்தம் 10,748 பேர்களுக்கு, குன்னம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மையத்தில் ஆண்கள் 1540 பேர்களுக் கும், பெண்கள் 3,412 பேர்களுக்கு என மொத்தம் 4,9 52 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படவுள்ளது என்றார். நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் முஹம்மது யூசுப், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : construction workers ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...