×

தஞ்சையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சை, பிப்.16: தஞ்சையில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை தஞ்சை நகர டவுன் டிஎஸ்பி பாரதிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் வேணுகோபால், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜயகுமார், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்ட கூடாது, பேருந்தில் படியில் நின்று பயணம் செய்யக்கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். 4 சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Tanjore ,
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை