×

இந்திய குடிமை பணி தேர்வுக்கான பயிற்சி முகாம் விண்ணப்பிக்க 19ம் தேதி கடைசி

சேதுபாவாசத்திரம்,பிப்.16: தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கடந்த 11-7-2017 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததின்படி, மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்திய குடிமை பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக. பிரத்யேக பயிற்சி அளிக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் இணைய தளமான www.fisheries.tn.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளத்துறை துணை, இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்திசெய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 19.2.2021 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags : Indian Civil Service Examination ,
× RELATED இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி...