×

வாகனங்களில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி

கும்பகோணம், பிப்.16: சுற்றுலா வாகனங்கள், சுமை ஏற்றும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களின், பக்கவாட்டுகள், முன்பக்கம், பின்பக்கம் ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் அடையாளம் காணும் வகையில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க வேண்டுமென்பது போக்குவரத்து விதிமுறைகளில் ஒன்றாகும். அதன்படி ஒட்டாத வாகனங்களை கும்பகோணம் அடுத்த தாராசுரம் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலைகளில் நிறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை ஆகியோர் திடீர் சோதனையிட்டனர். அப்போது ஸ்டிக்கர்கள் ஒட்டாத வாகனங்களில் வெள்ளை, மஞ்சள், சிகப்பு போன்ற வண்ண ஸ்டிக்கர்களை தனித்தனியாக வாகனங்களின் வண்ணங்களுக்கேற்ப ஒட்டி அனுப்பினர். மேலும் டிரைவர் சீட்டுக்கு முன்பாக வளைவுகளில் முந்தாதே, சீட் பெல்ட் அணியவும், சிக்னல்களை மதிக்கவும் போன்ற விதிமுறைகள் கொண்ட ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...