×

கிராம உதவியாளர் சங்கத்தினர் ரத்த கையெழுத்திடும் போராட்டம்

திருவாரூர், பிப்.16: கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் நேற்று ரத்த கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை மாத ஊதியமாக கிராம உதவியாளர்களுக்கு ரூ.15,700 வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்கிட வேண்டும். மாநிலம் முழுவதும் இருந்து வரும் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வரும் 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இவர்கள் தெரிவித்துள்ள நிலையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தாலுகா அலுவலகம் முன்பாக ரத்த கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட தலைவர் அப்பாசாமி தலைமையிலும், செயலாளர் ஜெயபாபு முன்னிலையிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுச் செயலாளர் தமிழ்செல்வன், செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு