×

நகையை அடகு வைத்த சம்பவம் மருமகளுடன் தகராறு மாமியார் தற்கொலை

திருச்சி, பிப். 16: திருச்சியில் நகையை அடகு வைத்த சம்பவத்தில் மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து மாமியார் தற்கொலை செய்து கொண்டார். திருச்சி சுப்ரமணியபுரம் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். டெய்லர். இவரது மனைவி அருள்மொழி (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வேல்முருகன். இவரது மனைவி மதுசுதா. கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்ப செலவுக்காக மருமகள் மதுசுதா நகையை வாங்கி அடகு வைத்து அருள்மொழி செலவு செய்து விட்டார். இதையடுத்து அருள்மொழியிடம் நகையை மதுசுதா கேட்டார். இதனால் மாமியார், மருமகளிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அருள்மொழி, சமையல் அறையில் தூக்கிட்டு கொண்டார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழி இறந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கையை அறுத்து கொண்டு சென்னை வாலிபர் தற் கொலை:  திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சி காவிரி ஆற்று பகுதியில் வாலிபர் கையை அறுத்து கொண்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி அவரது சட்டை பையை சோதித்து பார்த்தனர். அப்போது அதிலிருந்த தொலைபேசி நம்பரை வைத்து போன் செய்ததில் அவர் சென்னையை சேர்ந்த ஜீவானந்தம் (28) என்பதும், திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கீழபடுகையை சேர்ந்த சங்கரி என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. ஜீவானந்தத்தின் 2 சிறுநீரகமும் செயல் இழந்ததால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் துன்புற்று வந்ததால் சென்னையிலிருந்து ஜீவானந்தம் புறப்பட்டு பனையகுறிச்சி வந்தார். பின்னர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்துக்கு அருகில் காவிரி ஆற்றில் தனது கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஜீவானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா விற்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது: திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த பகுதியில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ராம்ஜிநகர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்ற மில் காலனியை சேர்ந்த விமலா (50), மில் காலனி மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்ற மல்லிகா (60) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா, ரூ.220 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தென்னூர் பாரதிநகர் மைதானம் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியான புது மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகவேலை (41) கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா, ரூ.110 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Mother-in-law ,quarrel ,daughter-in-law ,suicide ,jewelery pawning incident ,
× RELATED இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று...