மாநகராட்சி நகராட்சி பகுதியில் மாற்றுத்திறனாளிகள் கடை நடத்த இட அனுமதி

திருச்சி, பிப். 16:  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பார்வையற்றோர் சம்மேளம் சார்பில் தலைவர் சரவணன் தலைமையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகையை மற்ற மாநிலங்களை போல் உயர்த்தி வழங்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் கடை நடத்த இட அனுமதி வழங்க வேண்டும். அரசு நடத்தும் போட்டி தேர்வுகளான டிஎன்பிஸ்சி, டெட், டிஆர்பி ஆகியவற்றுக்கு பார்வையற்ற மாணவர்களுக்கு என சிறப்பு தேர்வுகள் நடத்த வேண்டும். அனைத்து பார்வையற்றவர்களுக்கும் கைபேசி வழங்க வேண்டும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>