×

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசி திருவிழா நாளை கொடியேற்றம்

பாவூர்சத்திரம், பிப்.16: பாவூர்சத்திரம் காமராஜர் நகரில் அமைந்துள்ள வென்னிமலை முருகன் கோயில் மாசித்திருவிழா நாளை (17ம்தேதி) தொடங்கி 27ம்தேதி வரை  நடக்கிறது. முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 5.30 மணிக்கு கொடியேற்றமும், 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தல், 12 மணிக்கு உச்சிகால பூஜை பாலாபிசேகம் நடக்கிறது.மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு சப்பரத்தில் சுவாமி ரதவீதி உலா வருதலும் நடக்கிறது. முதல் நாள் திருவிழா காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பிலும், 2ம்நாள் சைவ வேளாளர் சமுதாயம் சார்பிலும், 3ம்நாள் தேவர் சமுதாயம் சார்பிலும், 4ம்நாள் யாதவர் சமுதாயம் சார்பிலும், 5ம்நாள் பட்டங்கட்டியார் சமுதாயம் சார்பிலும், 6ம்நாள் அரிசன சமுதாயம் சார்பிலும், 7ம்நாள் விஸ்வகர்மா சமுதாயம் சார்பிலும், 8ம்நாள் செங்குந்த முதலியார் சமுதாயம் சார்பிலும், 9ம்நாள் வணிக வைசிய செட்டியார் சமுதாயம் சார்பிலும், 10ம்நாள் நாடார் சமுதாயம் சார்பிலும், 11ம்நாள் பிராமணர் சமுதாயம் சார்பிலும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : flag hoisting ceremony ,Pavoorchatram ,Vennimalai Murugan Temple ,
× RELATED நாகர்கோவிலில் திக கொடியேற்று விழா