×

தண்டுபத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார்

உடன்குடி,பிப்.16: திமுக மாநில இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் 43வது பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் சட்டமன்ற அளவில் 136அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டி உடன்குடி மின்வாரிய மைதானத்தில் நடந்தது. சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா தண்டுபத்திலுள்ள தெற்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. மாநில மாணவரணி துணைசெயலர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் இளைஞரணி ராமஜெயம், மகளிரணி ஜெசிபொன்ராணி, ராஜபாண்டியன், வழக்கிறஞர் அணி ஜெபராஜ், ரவிராஜா, மாவட்ட துணைஅமைப்பாளர்கள் வர்த்தக அணி இளங்கோ, சுகு, விவசாயஅணி சக்திவேல், மாணவரணி முகைதீன், உடன்குடி தொடக்க வேளாண்மைக்கூட்டுறவு கடன்சங்கதலைவர் அஸ்ஸாப் அலி பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலருமான பாலசிங் வரவேற்றார். செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த ராமசுப்பிரமணியபுரம் அணிக்கு ரூ.50,000, வெற்றிக்கோப்பையும், 2வது இடம் பெற்ற கொட்டங்காடு அணிக்கு ரூ.40,000, வெற்றிக்கோப்பையும், மூன்றாமிடம் பெற்ற வைத்திலிங்கபுரம் அணிக்கு ரூ.30,000, வெற்றிக்கோப்பையும், நான்காமிடம் பெற்ற காயல்பட்டினம் அணிக்கு ரூ,20,000, வெற்றிக்கோப்பைகளை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார். மேலும் சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்ட ராஜலிங்கம், தவனேஷ் ஆகியோருக்கு ரூ.20,000 மற்றும் வெற்றிக்கோப்பைகள், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்பட்டது. இதில் திமுக ஒன்றியச்செயலர்கள் திருச்செந்தூர் ரமேஷ், ஆழ்வை கிழக்கு நவீன்குமார், நகரசெயலர்கள் ஜான்பாஸ்கர், முத்துமுகமது, ரவிசெல் வகுமார், சுடலை, முருகப்பெருமாள், முத்துவீரப்பெருமாள், மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், நகர வர்த்தகஅணி அமைப்பாளர் அப்துல்ஹமீது, நகர அவைத் தலைவர் திரவியம், நகர பொருளாளர் தங்கம், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் சுதாகர்  உட்பட கலர் கலந்து



Tags : Anita Radhakrishnan MLA ,
× RELATED உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி...