×

முதல்வரின் சுற்றுப்பயணம் வெற்று பெறும் அமைச்சர் கடம்பூர்ராஜூ பேட்டி

திருச்செந்தூர், பிப்.16: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (17ம் தேதி) முதல் 3 நாட்கள் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் நாளை (17ம் தேதி) மகளிர் குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசசாமி பங்கேற்று பேசுகிறார். இதையொட்டி கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் கடம்பூர்ராஜூ நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:  சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் மீண்டும் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 3ம் தேதி வருகை தந்து கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் நாளை (17ம் தேதி) சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 11 மணியளவில் வைகுண்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். அதன்பிறகு திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட மறவன்மடத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் ஐடி சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். நிறைவாக தூத்துக்குடியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 1லட்சம் பேர் பங்கேற்கின்றனர். முதல்வரின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மாபெரும் வெற்றிப்பயணமாக அமையும். பிரதமர் மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் வெளிப்படையாக தமிழக அரசையும், முதல்வரின் செயல்பாட்டையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இதனை தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். சாதி, மத அரசியல் வேறுபாடு அதிமுகவுக்கு என்றும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின் போது மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கேஆர்எம்.ராதாகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட ஜெ. பேரவை துணைச் செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் யூனியன் துணைச் சேர்மன் ரெஜிபர்ட் பர்னான்டோ ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Kadamburraju ,
× RELATED அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு...