திமுக எம்எல்ஏ தலைமையில் ஜேசிபியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் தாசில்தார், டிஎஸ்பி சமரசம் வந்தவாசியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்னை

வந்தவாசி, பிப்.16: வந்தவாசியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்னை தொடர்பாக திமுக எம்எல்ஏ தலைமையில் வியாபாரிகள் நேற்று ேஜசிபியை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் மற்றும் டிஎஸ்பி உள்ளிட்டோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நெடுஞ்சாலை துறை சார்பில் பஜார் வீதி, காந்திசாலை, தேரடி, காஞ்சிபுரம் சாலை, தாலுகா அலுவலகம் சாலை, ஆரணி சாலை, சேத்துப்பட்டு நெடுஞ்சாலை, தேரடி, திண்டிவனம் நெஞ்சாலை, அச்சரப்பாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்றிக்கொள்ள நேற்று முன்தினம் வரை கெடு விதித்து இருந்தனர். இதற்காக ஒளிபொறுக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவே பஜார் வீதி, காஞ்சிபுரம் சாலை, தேரடி, காந்தி சாலை, அச்சரப்பாக்கம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள் தாமாகவே அகற்றிக்கொண்டனர். ஒரு சிலர் மட்டும் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் பழைய பஸ் நிலையம் காமராஜர் சிலை பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்றுவதற்காக ஜேசிபி இயந்திரம் வந்தது. அப்போது அங்கு வந்த எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார், திமுக மருத்துவரணி மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசினர். நீங்கள் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து வியாபாரிகளே அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி கொண்டுள்ள நிலையில் எதற்காக இந்த ஜேசிபி என கூறி வாகனம் முன்பாக முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனை தொடர்ந்து ஏடிஎஸ்பி வனிதா, டிஎஸ்பி பி.தங்கராமன், தாசில்தார் திருநாவுக்கரசு, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, வியாபாரிகள் அனைவரும் ஆக்கிரமிப்புகளை தாமாகவே அகற்றிக்கொள்வதாக கூறியதை தொடர்ந்து, ஜேசிபி வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

பின்னர், அனைது வியாபாரிகள் சங்கம், வியாபாரிகள் பேரமைப்பு, வந்தவாசி வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆரணிக்கு சொன்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமசந்திரனை சந்தித்தனர். அப்போது ெகாரோனா காராணமாக கடந்த 8 மாதங்களாக வியாபாரம் இல்லாததால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் இடையூறு செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது குறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

Related Stories:

>