×

தலை விரித்தாடும் லஞ்சம்: அரசு மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் பற்றாகுறை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உயிர் காக்க உதவும் அத்தியாவசிய  மருந்துகள் பற்றாகுறையாக இருப்பதால், போதிய அளவு அவற்றை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து, மாவட்டத் தலைவர் நந்தன், மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் ஆகியோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் சாந்திமலரை, நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில்,  மருத்துவமனையின் அனைத்து  வழிகளையும் பொது மக்களின் பயன்பாட்டுக்கு உடடியாக திறந்துவிட வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் வழிகாட்டி பலகை வைப்பதோடு, நோயாளிகளை ஸ்டெரச்சரில் கொண்டு செல்லும் வழிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும். நோயாளிகளை கொண்டு செல்ல தனி வழிகளை அமைக்க வேண்டும். விடுமுறை நாட்களில் நரம்பியல், அறுவை சிகிச்சை உள்பட அனைத்து துறைகளிலும் மருத்துவர்கள் பணியில் இருப்பதை, மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

உயிர் காப்பதற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் புறநோயாளிகளுக்கு தட்டுப்பாடில்லாமல் கிடைக்க வேண்டும். சிகிச்சைக்காக வருபவர்களை தனியாரிடம்  மருந்து வாங்க நிர்பந்திக்க கூடாது. நோயாளிகளை வீல் சேரில் கொண்டு செல்ல 200, கழிப்பறையை சுத்தம் செய்ய 30, (படுக்கை ஒன்றுக்கு)  ஆண் குழந்தை பிறந்தால்,  800, பெண் குழந்தை பிறந்தால் 700 லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்கு 108 அவசர ஊர்தி இருந்தும், லஞ்சம் பெற்று கொண்டு தனியார் அவசர ஊர்திக்கு ஆதரவாக செயல்படும் மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். என கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...