×

ஜாக் அமைப்பினர் ரம்ஜான் சிறப்பு தொழுகை

 

திருப்பூர், மார்ச் 21: இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதம் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி துவங்கியது. 30 நாட்கள் நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட உள்ளனர். ஆனால் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்றே ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனைப் பின்பற்றும் ஜாக் அமைப்பினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் காங்கயம் சாலை அருகே உள்ள ரேணுகா நகர் வளாகத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையினை சென்னை ஜாக் அமைப்பின் இசுலாமிய அழைப்பாளர் மதார்ஷா பிர்தவ்ஸி நடத்தி வைத்தார்.  கூட்டு தொழுகையில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

Tags : JAC ,Ramadan ,Tiruppur ,Muslims ,Tamil Nadu ,Saudi Arabia… ,
× RELATED ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு...