×

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம்: நாளை தொடங்குகிறது

காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் நாளை தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம், கடந்த 2014ம் ஆண்டு நடந்தது. அதன் பின், கோயில் திருப்பணிகள் நடைபெற்று 2017ம் ஆண்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது. இதையொட்டி, தொடர்ந்து 3 ஆண்டுகள் பிரம்மோற்சவம் நடக்கவில்லை. அதன்பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடக்கிறது. இந்நிலையில், இந்தாண்டு பிரம்மோற்சவ விழா நாளை அதிகாலை, 4 மணிக்குமேல் 5.15 மணிக்குள்ளாக, கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தங்க மான், சந்திரப்பிரபை, யானை, ஹம்ஸ வாகனம், நாகம், தங்கக் கிளி, குதிரை, வெள்ளிரதம், தங்க சிம்மம், சூரிய பிரபை, தங்க பல்லக்கு, முத்து சப்பரம், சரபம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் 23ம் தேதி தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) தியாகராஜன், கோயில் நிர்வாக அலுவலர் நாராயணன், பரம்பரை தர்மகர்த்தாவின் கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.

Tags : Kanchi Kamatchi Amman Temple ,
× RELATED காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியது