×

கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திருவள்ளூர்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஆண்ட்ராய்டு செல்போன்களை வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.விண்ணப்பித்து பல நாட்கள் ஆகியும் அதிகாரிகள் முறையாக செல்போன் வழங்கவில்லை. சீனியாரிட்டி அடிப்படையில் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர் என கூறி அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பார்வையற்றோர் கூறுகையில், “குறைவான எண்ணிக்கையில் செல்போன்கள் வந்துள்ளது. சீனியாரிட்டி அடிப்படையில் அடையாள அட்டை எண் முறையில் வழங்கப்படுவது தான் வழக்கம். ஆனால் அவர்கள் வந்து இருப்பவர்களுக்கு முதலில் கொடுத்து அடாவடி செய்கின்றனர்” என்றனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கலைய செ்ய்தனர்.

Tags : Siege ,Office ,Collector ,
× RELATED குமரி கலெக்டர் அலுவலக தேர்தல்...