பணி நிரந்தரம் செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி: பொன்னேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் 70 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்றக்கோரி சிஜடியு சார்பில் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை  ஊழியர்  சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட  செயலாளர் ஏ.ஜி.சந்தானம், பேரூராட்சி சங்க தலைவர் டி.தனுஷ்கோடி, செயலாளர்  சுரேஷ், பொருளாளர் எல்லம்மாள், சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாநில  குழு உறுப்பினர் எஸ்.ஏ.கலாம், மாவட்ட துணை நிர்வாகிகள் ஆர்.பூபாலன்,  எஸ்.எம்.அனீப்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப் ஏற்பட்டது.

Related Stories:

>