×

தொண்டை மண்டல ஆதீனத்தின் 233வது மடாதிபதியாக நடராஜன் தேர்வு

சென்னை: தொண்டை மண்டல ஆதீனத்தின் 233வது மடாதிபதியாக, நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் மடத்தின் 232வது மடாதிபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இதை தொடர்ந்து புதிய மடாதிபதி தேர்வு பணி நடந்தது. அதன்படி, பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுடைய 13 விண்ணப்பங்கள் தேர்வு செய்து, அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
இதில் அனைத்து மாவட்டங்களில் உள்ள தொண்டை மண்டல ஆதீனத்தின் சீடர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு ஆன்மிக பணிகளை செய்யும் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் நடராஜன், ஆதீன மடத்தின் 233வது மடாதிபதியாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாச பரமாசார்ய சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டு, மடத்தின் பொறுப்புகள் வழங்கப்பட்டன. மடத்தின் மூத்த சீடர்கள், சான்றோர்கள், முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்ட மடாதிபதி, மடத்தின் பூஜைகளை அனைவர் முன்னிலையிலும் மேற்கொண்டார்.

Tags : Natarajan ,abbot ,Thondai Mandalam ,
× RELATED தஞ்சாவூரில் மொபட் திருடியவர் கைது