×

கரியகோயில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

வாழப்பாடி,  பிப். 16:  கரியகோயில் அணையில் இருந்து, பாசனத்துக்கு நேற்று  தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து 15 நாட்கள் நீர்திறக்கப்படும் என  அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த  பாப்பநாயக்கன்பட்டியில் கரியகோயில் அணை அமைந்துள்ளது. இந்த நிலையில்  விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று நேற்று அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கால்வாய் மற்றும் ஆற்றுப்பாசனத்திற்கு, பழைய ஆயக்கட்டு தாரர்களுக்கு  தினசரி விநாடிக்கு 54 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு 69.90 மில்லியன் கனஅடி தண்ணீரும், புதிய ஆயக்கட்டுதாரர்களுக்கு 69.93 மில்லியன் கனஅடி தண்ணீர் என, இரண்டு  புறங்களிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாநில கூட்டுறவு வங்கி  தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்எல்ஏ சின்னதம்பி, சரபங்கா வடிநில உபகோட்ட உதவி  செயற்பொறியாளர் கவிதாராணி, கரியகோயில் அணை உதவி பொறியாளர் விஜயராகவன்,  பெத்தநாயக்கன்பாளையம் பாசன பிரிவு இளம் பொறியாளர் பாஷா உள்பட பலர்  கலந்துகொண்டு பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தனர்.

Tags : Opening ,Kariyakoil Dam ,
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்