ராசிபுரத்தில் 18 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம், பிப்.16: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 18 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று ஆர்சிஎம்எஸ் சார்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், மொத்தம் 820 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் ஆர்சிஎச் ரகம் குவிண்டால் குறைந்த பட்சம் 5,469க்கும், அதிக பட்சம் 7,330க்கும் விற்பனையானது. இதே போல் டிசிஎச் ரகம் குறைந்த பட்சம் 7666க்கும், அதிக பட்சம் குவிண்டால் 8,686க்கும் ஏலம் போனது. மொத்தம் 18 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.

Related Stories:

>