×

சேந்தமங்கலத்தில் சிறுதானிய உணவு பிரசார இயக்கம்

சேந்தமங்கலம், பிப்.16: சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி ஆகிய வட்டார வேளாண் விரிவாக்க மையம் சார்பில், சிறுதானிய உணவு பாதுகாப்பு இயக்க பிரசார தொடக்க விழா, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா சேந்தமங்கலம் புது பஸ் ஸ்டாண்டில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

சந்திரசேகரன் எம்எல்ஏ கலந்துகொண்டு சாமை, திணை, கேழ்வரகு, குதிரைவாலி ஆகிய சிறுதானிய உணவுகள் குறித்த உணவு பாதுகாப்பு இயக்க 4 பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து 10க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை வழங்கினார். இதில் வேளாண்மை உதவி இயக்குனர்கள் இந்திராணி, கவிதா, சவிதா, வேளாண் அலுவலர் சூரிய பிரகாஷ், துணை அலுவலர் சேகர், உதவி அலுவலர்கள் மாயஜோதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chennamangalam ,
× RELATED சேந்தமங்கலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்