திருத்தங்கல் நகராட்சியில் கட்டிட பணிகளுக்கு பூமிபூஜை அமைச்சர் தொடங்கி வைத்தார்

சிவகாசி, பிப். 16: சிவகாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் திருத்தங்கல் நகராட்சியில் நேற்று ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுமானப்பணிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருத்தங்கல் நகராட்சி ஆணையாளர் பாண்டித்தாய், அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்ரமணியன், தெய்வம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரமணா, அ.செல்வம், கிருஷ்ணமூர்த்தி, நகர  அவைத்தலைவர் கோவில்பிள்ளை, சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சீனிவாசபெருமாள், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நாரணபுரம் ஊராட்சி கழகச் செயலாளர் ஏ.எஸ்.மாரிக்கனி மற்றும் அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>