பாம்பு கடித்து தொழிலாளி பலி

சிவகாசி, பிப். 16: வெம்பக்கோட்டை தாலுகா தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஆப்ரகாம்(52). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.  நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள முள்வேலி காட்டுக்குள் சென்றுள்ளார். அப்போது இடது காலில் பாம்பு கடித்துள்ளது.  சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆப்ரகாம் பரிதாபமாக உயிரிழந்தார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>