×

அப்பாவுக்கு பாஜவில் சீட் மகன் காங். சார்பில் போட்டியிட மறுப்பு

அசாம் காங்கிரஸ் எம்பி பிரத்யுத் பர்தோலோய் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜவில் இணைந்ததைத் தொடர்ந்து, வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் திஸ்பூர் தொகுதி பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே மார்கெரிட்டா தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் அவரது மகன் பிரதீக் நிறுத்தப்பட்டு இருந்தார். தந்தை பா.ஜ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், தான் மார்கெரிட்டா தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார். இதுதொடர்பாக கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில்,’ நான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினராக நீடிப்பேன். கட்சியின் மீது மிகுந்த மரியாதையுடனும், ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் இருப்பதால் மார்கெரிட்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து எனது வேட்புமனுவை விலக்கிக்கொள்ளும் முடிவை நான் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த முடிவு எனது மரியாதை மற்றும் காங்கிரஸ் கட்சியின் விழுமியங்களையும் ஒழுக்கத்தையும் காக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : BAJA ,Assam Congress ,Pratyut Bardoloy ,Congress party ,Bhajj ,Jay ,Pratik ,Margarita constituency Congress party ,
× RELATED மம்தா தொகுதியில் பிரசாரம் தொடங்கினார் பா.ஜ சுவேந்து