திருவாடானை தொகுதி பாஜ பொறுப்பாளர் குட்லக் ராஜேந்திரன் இல்ல திருமணவிழா எம்பி, எம்எல்ஏ.க்கள், கட்சி பிரமுகர்கள் வாழ்த்து

ராமநாதபுரம், பிப்.16: திருவாடானை சட்டமன்ற தொகுதி பாஜ பொறுப்பாளரும், விவசாய அணி மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் யூனியன் தலைவருமான குட்லக் ராஜேந்திரன்-மல்லிகா ராஜேந்திரன் ஆகியோரின் மகன் பொறியாளர் ராஜேஷ்-நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த தரம்சந்த்-நீலாபாய் ஆகியோரின் மகள் ஷ்ரமித்தா திருமண விழா திருவாடானை குட்லக் திருமண மகாலில் நேற்று நடைபெற்றது.

முன்னாள் மத்திய, மாநில அமைச்சர் திருநாவுக்கரசர் எம்பி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். முன்னாள் அமைச்சர் நயினார்நாகேந்திரன், மாவட்ட பாஜ தலைவர் முரளிதரன், பாஜ மாநில ஓபிசி அணி துணை தலைவர் சுரேஷ் களஞ்சியம், மாவட்ட பார்வையாளர் குப்புராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் நவாஸ்கனி எம்பி, முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எம்எல்ஏ, காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், முன்னாள் அமைச்சர் வது.நடராஜன், திரைப்பட இயக்குநர் அமீர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சாயல்குடி வேலுச்சாமி, ராமநாதபுரம் காங்கிரஸ் சட்டமன்ற பொறுப்பாளர் வாலியா முத்துராமலிங்கம், தேமுதிக மாவட்ட தலைவர் சிங்கை ஜின்னா, முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் நல்ல சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் தென்னவன், திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், அமமுக மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை பாஜ மாவட்ட இளைஞரணி துணை தலைவர் டாக்டர் குட்லக் ராகேஷ், ஜிஎல்ஆர் கனிமவள நிறுவன இயக்குனர் ராகுல் ஆகியோர் வரவேற்றனர். விழா  ஏற்பாடுகளை குட்லக் ராஜேந்திரன், மல்லிகா ராஜேந்திரன், ஹேமா, பாஜ பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் குட்லக் நாகநாதன், விமலா, அபிஷேக், பிரதிஜா, தரம்சந்த், லீலாபாய், ஸ்ரேயன்ஸ், ஸ்ரத்தா மற்றும் குட்லக் குடும்பத்தினர், விவசாய அணி பொதுச்செயலாளர் ஜெயபாண்டி, மருதுபாண்டியன் உள்பட பலர் செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் குட்லக் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.

Related Stories:

>