×

ஒத்தக்கடையில் நாளை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரம்

வாடிப்பட்டி, பிப்.16: மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை யா.ஒத்தக்கடையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதனை மாநாடு போல் நடத்த மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏ மூர்த்தி, மணிமாறன் தலைமையில் தீவிரமாக  பணிநடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை பெற்று வருகிறார். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை யா.ஒத்தக்கடையில் நாளை மாலை நடைபெற உள்ளது.

இதற்காக ஒத்தக்கடையில் உள்ள மாநாட்டுத் திடலில் சுமார் 50 ஆயிரம் மக்கள் அமரும் வகையில் பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக இப்பணிகள் வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் மேற்பார்வையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மைதானம் முழுவதும் திமுகவின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும் விழாவில் மதுரை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று தொகுதிகள், தெற்கு மாவட்ட மூன்று தொகுதிகள் என ஆறு தொகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags : constituency ,Stalin ,concert ,
× RELATED ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை...