மதுரை, பிப்.16: மதுரை பைகாரா பகுதியைச் சேர்ந்த இன்ஜினியர் முருகனின் வீட்டில் 58 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கம் திருடு போனது. இதன்பேரில் விசாரிக்கப்பட்ட, மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர் கண்ணன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் தாக்குதல், மிரட்டலுக்குப் பயந்து கண்ணன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அவரது உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.