பழநியில் கோயில் கும்பாபிஷேகம்

பழநி, பிப். 16: பழநி டவுன், 5வது வார்டு, காட்டு நாயக்கன் தெருவில்  செல்லக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. 13ம் தேதி கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து தேவதா அனுக்ஞை, புண்யாகம், பஞ்சகவ்யம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, பூர்ணாகுதி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரம்ரட்சாபந்தனம், கும்பஸ்தாபணம், கலாகர்ஷணம், யாகபூஜை,  சூக்த, துர்க்கா சூக்த ஹோமங்கள், திரவ்யாகுதி, விஷேசந்தி, பூதசுத்தி போன்றவை செய்யப்பட்டு கோபுர கலசங்கள் வைக்கப்பட்டது. நேற்று 4ம் காலபூஜை, நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி, திரவ்யாகுதி, யாத்ராதன சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரை எடுத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்தனர். பின்னர் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>