கொரோனா தடுப்பூசி போட கட்டாயப்படுத்த கூடாது கிராம சுகாதார செவிலியர்கள் கோரிக்கை

திண்டுக்கல், பிப். 16: திண்டுக்கல் மருத்துவமனை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமை வகிக்க, மாரியம்மாள், ரோணிக்கம் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் நிர்மலா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கொசவபட்டி பிளாக் கிராம சுகாதார செவிலியர் லீலாவதியை தற்கொலைக்கு தூண்டிய மாவட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மினி கிளினிக்கை வரவேற்கிறோம். அதேசமயம் சுகாதார நிலையங்கள் உடன் ரோந்து சேர்ந்து இருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மினிகிளினிக்கில் கிராம சுகாதார செவிலியர்களை பணியமர்த்த வேண்டும். வீட்டு வாடகை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். கொரோனா தடுப்பூசியை போட கட்டாயப்படுத்த கூடாது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>