×

குன்னூர் முதல் ரன்னிமேடு வரை மலை ரயில் என்ஜினின் சோதனையோட்டம்

குன்னூர், பிப்.16: குன்னுாரில் இருந்து ரன்னிமேடு வரை பாரம்பரிய மலை ரயில் என்ஜினின் சோதனையோட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினமும்  மலை ரயில் இயக்கப்படுகிறது. அதில், குன்னுாரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இயக்கப்படும் மலை ரயில் பாரம்பரியம் மிக்க நீராவி என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது.  
 
இதில், பழமை வாய்ந்த எக்ஸ்-37397 என்ற எண் கொண்ட பர்னஸ் ஆயிலில் இயங்கும் என்ஜின் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. இதனுடன் ஒரு பெட்டி  இணைக்கப்பட்டு குன்னூரில் இருந்து ரன்னிமேடுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த என்ஜினுக்கு ‘பெட்டா குயின்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கன்னட மொழியில் ‘பெட்டா’ என்றால் மலை என்பதால், ‘மலைகளின் ராணி’ என, இந்த என்ஜினுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சோதனை முழுமையாக நிறைவடைந்து விரைவில் சுற்றுலா பயணிகளின் சேவைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Test run ,Rannimedu ,Coonoor ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...