×

உக்கடம் பெரியகுளத்தில் 90 சதவீத ஸ்மார்ட் சிட்டி பணிகள் நிறைவு

கோவை, பிப். 16: கோவை உக்கடம் பெரியகுளத்தில் 90 சதவீதம் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புணரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிந்து, இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மிதிவண்டி பாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், மிதக்கும் நடைபாதைகள் அமைப்பதற்கான பணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள் அமைத்தல், பாதசாரிகள் பாதை அமைத்தல், வண்ண விளக்குகள் அமைத்தல், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை உக்கடம் பெரியகுளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சுமார் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்’’ என்றார்.

Tags : Smart City ,Ukkadam Periyakulam ,
× RELATED புதுச்சேரியில் கால்வாயில்...