மக்கள் குறைதீர் கூட்டத்தில் 202 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, பிப்.16: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் 202 மனுக்களை அளித்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் நேற்று குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ. கவிதா, துணை கலெக்டர்கள் குமரன், விஜயராஜ்குமார் ஆகியோர் மனுக்களை பெற்றனர். இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை என 202 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

இந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர்கள் மற்றும் பிற குறைதீர் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.மேலும், உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு, மாநில அளவில் நடந்த சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வு சொற்றொடர் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற, துடுப்பதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காஸ்மிகாவை பாராட்டி கலெக்டர் கதிரவன் கேடயம் வழங்கினார்.

Related Stories:

>