×

விசைத்தறிகள் ஸ்டிரைக் 5ம் நாளாக நீடிப்பு ரூ.40 கோடி ரயான் ரகம் உற்பத்தி பாதிப்பு

ஈரோடு, பிப்.16: ரயான் நூல் விலையேற்றத்தை கண்டித்து ஈரோட்டில் விசைத்தறியாளர் உற்பத்தி நிறுத்த போராட்டம் 5வது நாளாக நீடித்து வருகிறது.
ஈரோட்டில் அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயான் நூல் விலை உயர்ந்த அளவுக்கு ரயான் துணி ரகம் உயரவில்லை. இதனால், ரயான் ரகம் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, ரயான் ரக உற்பத்தியை நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ள விசைத்தறியாளர்கள் கடந்த 11ம் தேதியில் இருந்து உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.5ம் நாளாக நீடித்து வரும் இப்போராட்டத்தால் கடந்த 5 நாட்களில் ரூ.40 கோடி மதிப்பிலான 1 கோடியே 20 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : turbine strike ,Ryan ,
× RELATED நான் செய்த கடினமான பயிற்சியின் பலன்...