×

புன்னகையை தேடி திட்டத்தில் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வீடு, வீடாக சென்று போலீசார் வழங்கினர்

பெரம்பலூர்,பிப்.12: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக ஆப்ரேஷன் ஸ்மைல் எனப்படும் புன்னகையை தேடி என்ற திட்டத்தின் மூலம் குழந்தைகளை சந்தித்து அவர்களின் எதிர் காலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பாக எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், ஆப்பரேஷன் ஸ்மைல் எனப்படும் “புன்னகையைதேடி” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை சேர்ந்த குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்கு குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி நீதிராஜ் தலைமையில், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அசிம், சப்.இன்ஸ்பெக்டர் ஜான், ஏட்டு சுகன்யா மற்றும் புன்னகையை தேடி குழுவினர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் கடைகள், ஓட்டல்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனரா எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : children ,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...