×

அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம் 4 கிராமங்களில் நாளை நடக்கிறது

அரியலூர், பிப்.12: அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம் நாளை (13ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 4 வட்ட கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நடைபெற உள்ளது. அதன்படி அரியலூர் வட்டத்தில் வாரணாசி, உடையார்பாளையத்தில் கீழக்குடியிருப்பு, செந்துறையில் மருவத்தூர், ஆண்டிமடத்தில் விளந்தை(வடக்கு) ஆகிய கிராமங்களில் நடக்கிறது. அரியலூர் வட்டத்திற்கு ஆர்டிஓவும், உடையார்பாளையம் வட்டத்திற்கு மண்டல மேலாளர், நுகர்பொருள் வாணிப கழக அலுவலரும், செந்துறை வட்டத்திற்கு துணைப் பதிவாளர் (பொது விநியோக திட்டம்) அலுவலரும், ஆண்டிமடம் வட்டத்திற்கு மாவட்ட வழங்கல் அலுவலரும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தினை வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். எனவே பொதுமக்கள் உணவுப் பொருள் வழங்கல் சம்மந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Ration quorum meeting ,villages ,Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...