கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

தா.பழூர், பிப். 12: தா.பழூர் கடைவீதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிசான்லால் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறப்பதற்கு அவர் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதே போன்று அதே பகுதியில் உள்ள செல்வபதி என்பவர் நடத்தி வரும் பாத்திர கடையிலும், பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கடை உரிமையாளர்கள் இருவரும், தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொள்ளை நடந்த எலக்ட்ரிக்கல் கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவில் கொள்ளையனின் உருவத்தை வைத்து, வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories:

>