×

காலமுறை ஊதியம் வழங்க கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 10வது நாளாக போராட்டம்

பெரம்பலூர்,பிப்.12: தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூரில் 10வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை (சிபிஎஸ்) ரத்து செய்திட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சமூக வன பாதுகாவலர்கள், மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்ப ட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என கொத்தடிமை கூலிமுறை பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவேண்டும். கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்.

அரசுத்துறையில் உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் 10வது நாளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் குமரி ஆனந்தன், தமிழ்நாடு சாலைப்பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த கவுஞ்சி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Government employees ,union protests ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்