×

அரியலூரில் 15ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர், பிப்.12: அரியலூரில் கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வரும் 15ம் தேதி அன்று அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்றைய தினமான 15ம் தேதி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விடுதி வளாகத்தில் (கலெக்டர் அலுவலகம் பின்புறம்) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் பெறும் மனுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. 18 வயது முதல் 35 வயது வரையிலான 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வி குறித்த விவரங்களை பதிவு செய்து பங்கேற்று பயனடையலாம். என்று தெரிவித்துள்ளார்.

Tags : Private Sector Employment Camp ,Ariyalur ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...