தை அமாவாசையையொட்டி நாகை புதிய கடற்கரையில் தீர்த்தவாரி

நாகை, பிப். 12: தை அமாவாசையை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தை அமாவாசையை முன்னிட்டு நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் இருந்து கல்யாணசுந்தரர், கோகிலாம்பாள் சுவாமிகள் புறப்பட்டது. பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரைக்கு வந்தடைந்தது. பின்னர் அஸ்திரதேவருக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி மாவு, தேன், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கடலில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>