தை அமாவாசையையொட்டி மணக்குடி நல்லநாயகி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா

மயிலாடுதுறை, பிப். 12: தை அமாவாசையையொட்டி மணக்குடி நல்லநாயகி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடந்தது. மயிலாடுதுறை அடுத்த மணக்குடி கிராமத்தில் பழமைவாய்ந்த நல்லநாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசை தினத்தில் பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி தை அமாவாசையான நேற்று நல்லநாயகி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடந்தது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடத்தை சுமந்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தரங்கம்பாடி:

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு திரளான பக்தர்கள் ஆனைக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>