மயிலாடுதுறைக்கு 14ம் தேதி வருகை மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்

சீர்காழி, பிப். 12: சீர்காழியில் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் ராசாங்கம் தலைமை வகித்தார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், செயலாளர்கள் ஜீவராஜ், முல்லைவேந்தன், நீலாவதி, ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தன. சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராம இளங்கோவன் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வருகிற 14ம் தேதி திருக்கடையூரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கொள்ளிடத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பது. சீர்காழி கிழக்கு ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொருளாளர் ரவி, சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தேசப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>