வேலாயுதம்பாளையம் மேம்பாலத்தில் மணல்திட்டுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சம்

கரூர், பிப்.12: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் மேம்பாலத்தில் படிந்துள்ள மணற்பரப்புகளை சம்பந்தப்பட்ட துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் வேலாயுதம்பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெங்களூர் கன்னியாகுமரி இடையே இந்தச் சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. வேலாயுதம்பாளையம் மேம்பாலம் அதிகளவு நீளம் கொண்டது. இந்த பாலத்தின் தடுப்புச் சுவரின் இரண்டு புறமும் அதிகளவு மணல் பரவி கிடக்கிறது. இதனால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பீதியுடன் இந்த பாலத்தை கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.  அதுவும் இரவு நேரங்களில் மேலும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் மூலம் மேம்பாலத்தில் பரவியுள்ள மணற்பரப்புகளை உடனடியாக அகற்றி, எளிதாக வாகன போக்குவரத்து நடைபெற தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories:

>