கோவை தி லண்டன் கிளினிக்கில் கடுமையான முதுகு வலிக்கு ஊசி மூலம் தீர்வு

கரூர்,  பிப்.12: கரூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண்மணி கடந்த 7  வருடங்களாக தனது முதுகுத் தண்டுவடத்தின் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட வலியால்  அவதியுற்று வந்தார். இதற்காக பல இடங்களில் ஆயுர்வேதா, சித்த மருத்துவம்,   அக்குபஞ்சர் மற்றும் எண்ணெய் மசாஜ் போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பயனளிக்கவில்லை.  ஆகையால் அந்த பெண்மணி பிப் 1-ம் தேதி கோவை தி லண்டன்  கிளினிக்கிற்கு  சிகிச்சைக்காக வந்தார்.  அவருக்கு எந்த ஒரு அறுவை சிகிச்சை  இல்லாமல் பாதிக்கப்பட்ட இடத்தில் ஊசியின் மூலம் குணப்படுத்தப்பட்டது. இது குறித்து  தி லண்டன் கிளினிக் டாக்டர் ரவீந்திரன் கூறுகையில், ‘‘முதுகுத்  தண்டுவடத்தின் இடுப்புப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக அவதியுற்று வந்த  பெண்மணி இந்த மாதம் எங்கள் லண்டன் கிளினிக்கை அணுகினார்,  ஆரம்பத்தில்  அவர்கள் எந்த ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்துகொள்ள தயாராக இருந்தார்.  

அவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் முற்றிலுமாக குணமளிக்க முடியும் என்று  கூறினோம். இங்கு அந்த பெண்மணிக்கு  எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் அனைத்து ரத்த பரிசோதனைகளும் எடுக்கப்பட்டது.  அப்போது, அதில் அவருக்கு முதுகுத்  தண்டுவடத்தின் கீழ் பகுதியான நரம்புகள் வெளியேறும் பகுதியில் சவ்வு  வலிமை  இல்லாததால் நரம்பு அழுத்தம் மற்றும் லேசான எலும்பு விலகுதல் காரணமாக  இடுப்பிலிருந்து பாதம் வரை வலி பரவுகிறது என கண்டறியப்பட்டது. பின்பு  ஸ்கேனின் வழிகாட்டுதலின்படி அந்த பெண்மணிக்கு பாதிக்கப்பட்ட இடமான  முதுகில் (இன் எ சிங்கில் சிட்டிங் ஸ்கென் கைடட் இன்ஜெக்ஷன்) ஊசி  செலுத்தப்பட்டது. ஊசி செலுத்தின பின்பு 15- 20 நிமிடங்களில் வலி குறைந்து  குணமடைந்தார்’ என கூறினார். மேலும் விபரங்கள் அரிய, 9865506000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.   

Related Stories:

>