×

நன்னிலம் திருக்கொடியலூர் சனி பகவான் கோயிலில் நாளை சிறப்பு ேஹாமம்

திருவாரூர், பிப்.12:திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அருகே திருக்கொடியலுரில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி நாளில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த டிச.27ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதையொட்டி இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் இக்கோயிலின் அனுகிரஹமூர்த்தியான மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு சனி பரிகார ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.இதனையொட்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் நாளையுடன் (13ம் தேதி) 48 நாட்கள் முடிவடைவதையொட்டி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது.

மேலும் நேரடியாக கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் பாலாபிஷேகத்திற்கான நன்கொடையாக ரூ.100ம், சனி பரிகார ஹோமத்திற்கு ரூ.500ம் நன்கொடை செலுத்தினால், பூஜை செய்து விபூதி, குங்குமம் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இத்தகவல் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nannilam Thirukodiyalur Saturn Bhagavan Temple Special Homam ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு