தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திமுக நிவாரண உதவி வழங்கல்

பாபநாசம்,பிப்.12: பாபநாசம் முல்லை நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு திமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப் பட்டது. இதில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், 10 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, பாய், தலையணை, வேட்டி, சேலை, போர்வை, சால்வை, டவல், ரூ.1,000 பணம் வழங்கினார். இதில் பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், ஒன்றிய பொறுப்பாளர் நாசர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரை முருகன் மற்றும் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

More
>