- Velumani
- தரங்கமணி
- சென்னை உயர் நீதிமன்றம்
- திமுகா
- சென்னை
- நீதிமன்றம்
- சி. விஜயபாஸ்கர்
- எம் ஆர் விஜயபாஸ்கர்
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்பட 7 பேர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு உள்ளதால், சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது எனவும் முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் திமுக தரப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.
