×

எங்கள் கணவர்களை மது அருந்த விடமாட்டோம்

பட்டுக்கோட்டை, பிப்.12: பட்டுக்கோட்டை அடுத்த பாலத்தளி கிராமத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேருந்துக்குள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை விதிகளின் வரைபடங்களும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அந்த பேருந்தின் பின்புறம் அனைவரும் பார்க்கும் வண்ணம் தொலைக்காட்சி பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றது. முதலில் பட்டுக்கோட்டை அடுத்த உதயசூரியபுரம் கடைத்தெருவிற்கு சென்ற அந்த பேருந்தை பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டனர். பாலத்தளி கிராமத்தில் அரசு பேருந்தில் 100 நாள் வேலை செய்யும் பெண்கள் ஏறினர். அவர்கள் சாலை பாதுகாப்பு வரை படங்களையும், விதிகளையும் பார்த்து விபரம் தெரிந்து கொண்டனர்.

முன்னதாக பேருந்துக்குள் பெண்கள் ஏறும்போது சாலை பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (சி.ஆர்.சி) கிளை மேலாளர் தங்கராசு, (வி.ஏ.டி.சி) கிளை மேலாளர் அன்பு, ஓட்டுநர் பயிற்சியாளர்கள் தேன்ராஜ், தர் புதுக்கோட்டை மண்டல பயிற்சியாளர் ஆகியோர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதனை தொடர்ந்து பேருந்துக்குள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பட்டுக்கோட்டை கிளை மேலாளர் தங்கராசு சாலை பாதுகாப்பை வலியுறுத்தி உறுதிமொழி வாசிக்க, அந்த உறுதிமொழியை பெண்கள் அனைவரும் தங்களது கையை நெஞ்சில் வைத்தபடி எடுத்துக் கொண்டனர். அப்போது அவர்கள், எங்கள் கணவர்களை நாங்கள் இனிமேல்குடிக்க விடமாட்டோம், சாலை விதிகளை மதிக்க சொல்வோம், நாங்களும் மதிப்போம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

Tags : husbands ,
× RELATED ‘மருதமலை’ படத்தில் வரும் வடிவேல்...