மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் 2 பேர் கைது

அறந்தாங்கி, பிப். 12: மணமேல்குடி அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மணமேல்குடி அருகே கட்டுமாவடி ராமர்கோவில் பகுதியில் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த டிப்பருடன் டிராக்டர் வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்த குருந்தன்குடியை சேர்ந்த ராஜபாண்டி (23), தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>